இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார்

இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார்

கனா கண்டேன், அயன், கோ,மாற்றான், கவன்,காப்பான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி ஆனந்த் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54, மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு உயிர் இழந்துள்ளார். அவருடைய உயிர் இழப்பு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல நடிகர் விவேக் உயிர் இழந்து சிறிது நாட்களே ஆன நிலையில் மற்றுமொரு உயிர் இழப்பு நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *