108 ஆம்புலன்ஸ் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்து,கர்ப்பணிபெண் உட்பட 3 பேர் உயிர் இழப்பு!

108 ஆம்புலன்ஸ் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்து,கர்ப்பணிபெண் உட்பட 3 பேர் உயிர் இழப்பு!

புதுபட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண் பிரசவத்திற்காக அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அந்த ஆம்புலன்ஸில் ஜெயலட்சுமி, அவரின் மாமியார் மற்றும் உறவினர் ஒருவர் இருந்துள்ளனர்.

ஆலத்தூர் அருகே வந்தபோது ஆம்புலன்ஸின் டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறிய ஆம்புலன்ஸ் சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது இதில் ஆம்புலன்ஸில் பயணம் செய்த கர்ப்பணி பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *