மைக் வேலை செய்யாததால் டார்ச்லைட்டை தூக்கி வீசிய கமல் வைரல் வீடியோ

மைக் வேலை செய்யாததால் டார்ச்லைட்டை தூக்கி வீசிய கமல் வைரல் வீடியோ

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றுள்ளார், அவர் பரப்புரை செய்ய தாமதமாக சென்றுள்ளார் அவருக்கு குறைவான நேரம் மட்டுமே இருந்தது. அவர் வந்த பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த மைக் வேலைசெய்யாமல் போனது.

இதனால் கோபமடைந்த கமல்ஹாசன் கையில் வைத்திருந்த டார்ச்லைட்டை பிரசார வாகனத்திற்குள் கோபமாக தூக்கி வீசுகிறார். இது அங்கிருத்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டது.பின்னர் பொதுமக்களை பார்த்து மைக் வேலை செய்யவில்லை என கூறினார்.

இருப்பினும் கமலின் இந்த செயலை சற்றும் எதிர்பாக்காத அவருடைய தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் யார் மீது டார்ச் லைட்டை வீசினார் என்று தெரியவில்லை, இருப்பினும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *