திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

திமுக எம்பியும் மகளிர் அணி தலைவருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பிரட்சாரம் செய்து வருகிறார். குறிப்பாக தென் மாவட்டங்களில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

Kanimozhi, 2G Scam Verdict, 2G Scam, DMK Patiala House Court, Delhi, CBI,  ED, | 2जी घोटाले में बरी होने के बाद DMK नेता कनिमोझी बोलीं, 'साथ देने के  लिए सभी का धन्‍यवाद' |

இரண்டு நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் பிரட்சாரம் செய்து வந்தார். அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததை தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதையடுத்து சென்னை திரும்பிய கனிமொழிக்கு லேசான தொண்டை கரகரப்பு ஏற்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நுங்கம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். தேர்தல் பரப்புரையின் போது கனிமொழியிடம் நெருக்கமாக இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *