குதிரையின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஊருக்கு சீல் வைத்த காவல்துறை!

குதிரையின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஊருக்கு சீல் வைத்த காவல்துறை!

இந்தியாவில் கொரோனா தலைவிரித்தாடிவரும் நிலையில் இறந்து போன குதிரை ஒன்றின் இறுதி ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டது கொரோனா பரவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மரடிமத் கிராமத்தில் குறிப்பிட்ட மத அமைப்பை சேர்ந்த குதிரை நேற்று திடீரென உயிர் இழந்தது. இந்த செய்தியை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் வரிசையாக குதிரையப் பார்க்க படையெடுத்தனர். இதனால் சிறிது நேரத்திலேயே 500க்கும் அதிகமான மக்கள் ஒன்று கூடினர்.

குதிரைக்கு மரியாதையை செலுத்தி ஊர்வலமாக எடுத்து சென்றனர். இது குறித்த வீடியோ வெளியாகி வைரலானது இதையடுத்து காவல்துறையினர் கொரோனா விதிமுறைகளை மீறியதாக அந்த ஊர்க்கு சீல் வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *