பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும்- கரூர் மாணவியின் உருக்கமான கடிதம்!

பாலியல் தொல்லையால் சாகும்  கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும்- கரூர் மாணவியின் உருக்கமான கடிதம்!

கரூர் வெண்ணைமலை பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த மாணவியின் தற்கொலைக்கான கடிதம் சிக்கியுள்ளது. அதில் அந்த மாணவி பாலியல் தொல்லையால் சாகுர கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும், என்ன யாரு இந்த முடிவை எடுக்க சொன்னான்னு சொல்ல பயமா இருக்கு.

இந்த பூமியில வாழ ஆசைப்பட்டேன் ஆனா இப்போ பாதியில போற இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும், பெருசாகி நிறைய பேருக்கு ஹெல்ப் பண்ணனும் ஆனா இப்போ முடியாதில்ல, அம்மா,சித்தப்பா,மணி மாமா அம்மு உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்ககிட்ட எல்லாம் சொல்லாம போறேன் மன்னிச்சிருங்க .

இனி எந்தவொரு பொன்னும் என்ன மாதிரி சாக கூடாது என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். பாலியல் வன்கொடுமையால் மேலும் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *