கேரளாவில் 14 பேருக்கு ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது!! ஜிகா வைரஸ் என்றால் என்ன? இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன?

கேரளாவில் 14 பேருக்கு ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது!! ஜிகா வைரஸ் என்றால் என்ன? இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன?

செறுவாரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண்ணிற்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியை சேர்ந்த 13 பேருக்கும் ஜிகா வைரஸ் இருப்பதாக கேரளா அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இன்னும் முடிவடையாத நிலையில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Zika Virus: What You Need to Know About the Virus | Time

ஜிகா வைரஸ் என்றால் என்ன? ஜிகா வைரஸ் என்பது கொசுக்களின் மூலமாக பரவும் நோயாகும். டெங்குவை பரப்பும் aegypti ,albopictus என்ற இரண்டு வகையான கொசுக்களின் மூலம் இந்த நோய் பரவுகிறது. ஜிகா வைரஸ் உடைய கொசு மனிதனை கடிக்கும் போது மனித உடலில் 3 முதல் 14 நாட்களுக்கு உயிருடன் இருக்கும். ஜிகா வைரஸ் பாதித்தவர்களுக்கு கைகால் வலி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இந்த வைரஸால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பிணிகளுக்கு இந்த கொசு கடிக்கும் போது ஜிகா வைரஸ் குழந்தைகளின் உடலிலும் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பிறக்கும் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கிறது.

Zika Transmission | Zika Virus | CDC

வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த பாதிப்பு அதிகம் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஜிகா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. வீட்டை சுற்றி கொசுக்கள் தங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்புடன் வைத்திருப்பது ஒன்றே இதற்கான தீர்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *