கொடநாடு கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு? சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளி!

கொடநாடு கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு? சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளி!

கொடநாடு பங்களாவில் நடத்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் முக்கியமான குற்றவாளியாக கருதப்படும் KV சயன் நேற்று கோவை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு 3 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இன்று பட்ஜெட் குறித்த விவாதத்தின் போது கொடநாடு குறித்த விவகாரம் எழுப்பப்பட்டது. இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் இதில் அரசியல் தலையீடு இருக்காது எனவும் முக ஸ்டாலின் உறுதியளித்தார்.

உண்மையான குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவர்களை சட்டப்பேரவை வளாகத்தில் இருந்தே வெளியேற்றுவதாக சபாநாயகர் உத்தரவிட்டார். பதாகைகளுடன் கூச்சலில் ஈடுபட்டது திட்டமிட்ட செயல் என அவர் விமர்சித்தார்.

இதனால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக,பாமக, பாஜக உறுப்பினர்கள் வெளியேறினர். கொடநாடு விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *