ஒன்றிய அரசு என்று கூற தடைவிதிக்க முடியாது-உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

ஒன்றிய அரசு என்று கூற தடைவிதிக்க முடியாது-உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்து வருகிறது. இது பிரிவினையை தூண்டும் வகையில் உள்ளதாக பாஜக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து விளக்கம் அளித்த முதல்வர் முக ஸ்டாலின் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது படியே ஒன்றிய அரசு என அழைப்பதாக விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமசாமி என்ற நபர் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இது குறித்து விசாரித்த நீதிபதிகள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இப்படித்தான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர்.

ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *