ஸ்டாலின் கையெழுத்திட்ட 5முக்கிய திட்டங்கள்!

ஸ்டாலின் கையெழுத்திட்ட 5முக்கிய திட்டங்கள்!

ஸ்டாலின் இன்று காலை முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின் கலைஞர் மாற்றம் பெரியார் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். பின்னர் 5 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார். ரேஷன் அரிசி அட்டை தாரர்களுக்கு கொரோனா நிதி உதவியாக 4000 வழங்கப்படும் என்றும் முதல் தவணையாக 2000 ரூபாய் மே மாதமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்றும் இந்த திட்டம் மே 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அணைத்து மகளிரும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் நாளை முதல் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரப்புரையின் போது பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை செயல்படுத்த புதிய துறை உருவாக்கம். கொரோனா பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் பொதுமக்கள் சிகிச்சை எடுத்தால் அந்த கட்டணத்தை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *