மோடி ஜல்லிக்கட்டு நாயகனா?? அப்படியெனில் போராடிய இளைஞர்கள் யார்? ஸ்டாலின் பிரட்சாரம்..

மோடி ஜல்லிக்கட்டு நாயகனா?? அப்படியெனில் போராடிய இளைஞர்கள் யார்? ஸ்டாலின் பிரட்சாரம்..

இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வத்தின் தொகுதியான போடிநாயக்கனூரில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். பன்னிர்செல்வம் முதல்வராக, துணை முதல்வராக இருந்த பொழுது போடி தொகுதிக்கு அவர் செய்த நலத்திட்டங்கள் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக அரசு மக்களை பற்றி எந்த கவலையும் கொள்ளவில்லை என்று குற்றம் சாற்றினார். மேலும் நேற்று பிரதமர் மோடி தாராபுரத்தில் பிரட்சாரம் செய்ததை சுட்டிக்காட்டி பேசிய முக ஸ்டாலின், மோடியை ஜல்லிக்கட்டு நாயகன் என பன்னிர்செல்வம் கூறியதை கண்டித்தார்.

ஜல்லிக்கட்டு தடை நீங்கியதற்கு முக்கிய காரணம் இளைஞர்களின் போராட்டங்களே தவிர பன்னிர்செல்வமோ, மோடியோ காரணமில்லை. உண்மையில் இளைஞர்கள் தான் ஜல்லிக்கட்டு நாயகர்கள் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *