தொடர்ந்து 3 வது நாளாக மழை பாதித்த பகுதிகளை பாரவையிட்டார் முக ஸ்டாலின்!

தொடர்ந்து 3 வது நாளாக மழை பாதித்த பகுதிகளை பாரவையிட்டார் முக ஸ்டாலின்!

சென்னையில் பெய்துவரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. பொதுமக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது, பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 3 வந்து நாளாக மழையால் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் பார்வையிட்டார். சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அக்பர் ஸ்கொயர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமினை முதலமைச்சர் பார்வையிட்டு, ஆய்வு செய்து, மக்களுக்கு சத்து மருந்துகளை வழங்கினார்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோபாலபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *