மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய பத்மப்ரியா, மஹேந்திரன் உள்ளிட்டோர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய பத்மப்ரியா, மஹேந்திரன் உள்ளிட்டோர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!

மக்கள் நீதி மையத்தின் முன்னாள் துணை தலைவர் மஹேந்திரன் , சென்னை தமிழச்சி பத்மப்ரியா உள்ளிட்ட பலர் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மக்கள் நீதி மய்யம் தேர்தலில் சந்தித்த தோல்வியால் அந்த கட்சியில் இருந்த பலர் ஒவ்வொருவராக விலக தொடங்கினர். அந்த வகையில் அக்கட்சியின் துணை தலைவர் மஹேந்திரன் கட்சியில் இருந்து விலகியது பலருக்கும் ஏற்படுத்தியது.

அதே போல மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியாவும் அக்கட்சியில் இருந்து விலகினார். சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய முக ஸ்டாலின் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளார் மஹேந்திரன் என்று பாராட்டினார்.

மேலும் 78 பேர் இன்று திமுகவில் இணைந்தனர். சித்தார்ந்த கொள்கைகள் ஒத்துப்போவதால் திமுகவில் இணைவதாக மஹேந்திரன் தெரிவித்தார்.

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *