இரண்டு நாள் பயணமாக பங்களாதேஷ் சென்றார் பிரதமர் மோடி, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார்!

இரண்டு நாள் பயணமாக பங்களாதேஷ் சென்றார் பிரதமர் மோடி, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார்!

கொரோனா பரவலை அடுத்து ஓராண்டுக்கு பிறகு முதன் முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். இந்தியாவின் அண்டைநாடான வங்கதேசத்தின் தேசிய தினம் மார்ச் 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வங்கதேசம் சென்றடைந்தார்.

வங்கதேச பிரதமர் Sheikh Hasina மோடியை விமான நிலையத்தில் வரவேற்றார்.இதையடுத்து வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் மரியாதையை செலுத்தினார்.வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பை கொடுத்தனர்.

கொரோனா காலத்தில் வங்கதேசத்துக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று தெரிவிப்பதற்காக சென்றுள்ளேன் என்று மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *