உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான்-தாராபுரத்தில் பன்னிர்செல்வம் பேச்சு

மோடி தாராபுரம் வருகை

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்ய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தாராபுரம் வந்தடைந்தார். தாராபுரத்தில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் எல்.முருகனை ஆதரித்து பிரட்ச்சாரம் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னிர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய துணை முதல்வர் பன்னிர்செல்வம் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது தான் ஜல்லிக்கட்டு தடை கொண்டுவரப்பட்டதாகவும் அதை தொடர்ந்து தான் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தினர்.

Image

ஜல்லிக்கட்டு போராட்டங்கள்

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்த பிரச்சனையை நான் பிரதமர் மோடியிடம் கொண்டு சென்றேன். அவர் 24 மணி நேரத்திற்குள் 4 துறைகளின் அரசாணையை கொடுத்து ஜல்லிக்கட்டு தடையை நீக்க உதவினார்.

மோடி ஜல்லிக்கட்டு நாயகன்

ஜல்லிக்கட்டு தடையை நீங்கியதால் என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைத்தனர், ஆனால் உண்மையில் பிரதமர் மோடி தான் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் என்று ஓ.பன்னிர்செல்வம் மோடியை புகழ்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *