எல்லாரும் நலமா இருக்குறீங்களா? மதுரை பொதுக்கூட்டத்தில் மோடி பேச்சு!

எல்லாரும் நலமா இருக்குறீங்களா? மதுரை பொதுக்கூட்டத்தில் மோடி பேச்சு!

மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று இரவு மதுரை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னிர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலில் பேசிய துணை முதலமைச்சர் பன்னிர்செல்வம் இந்த தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடக்கும் போர் என்று கூறினார்.

Image

பின்னர் பேசிய முதல்வர் பழனிசாமி கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காப்பாற்றுவார் பிரதமர் மோடி என்றும் உலக அளவில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றியவர் என்றும் நாட்டு மக்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து பேச தொடங்கிய பிரதமர் மோடி வீர வேல் வெற்றி வேல் என்று உரையை தொடங்கினார், எல்லாரும் நலமா இருக்கிறீங்களா என்று தமிழில் கேட்டார். தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை பறைசாற்றும் இடமாக மதுரை விளங்குகிறது என்று கூறினார் .

உலகின் தொன்மையான மொழியான தமிழை சங்கம் வைத்து வளர்த்தது மதுரை என்றும், மறைந்த தென் மாவட்ட தலைவர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன் என்றும் கூறினார். எம்.ஜி ஆர் நடிப்பில் வெளிவந்த மதுரைவீரன் படத்தை யாராலும் மறக்க முடியாது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *