பூமியை போன்றே செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம், கண்டுபிடித்த நாசா!!

பூமியை போன்றே செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம், கண்டுபிடித்த நாசா!!

பூமியை போன்றே செவ்வாய் கிரகத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது . இதை நாசாவின் இன்சயிட் லேண்டர் கண்டுபிடித்துள்ளது. இன்று வரை 500க்கும் அதிகமான நில நடுக்கத்தை நாசா கண்டறிந்துள்ளது இருந்தாலும் இந்த இரண்டு நில அதிர்வுகள் மிக பெரியவையாகவும் துல்லியமாக உணரக்கூடிவையாகவும் உள்ளது. புதிய நில நடுக்கங்கள் 3.1 ,மற்றும் 3,.3 அளவுகளை கொண்டுள்ளது.

Nasa's InSight lander records hundreds of marsquakes on red planet | Mars |  The Guardian

இதற்க்கு முன் 3.6 மற்றும் 3.5 என்ற அளவுக்கு நிலநடுக்கம் இருந்திருக்கிறது. செவ்வாயில் பூமியை போல நகரும் தட்டுக்கள் இல்லை என்றாலும் அங்குள்ள வெடிக்கும் எரிமலைகள் காரணமாக இந்த அதிர்வு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இன்சயிட் லேண்டர் இருக்கும் இடத்தின் வெப்பநிலை இரவு நேரங்களில் மைனஸ் 148 டிகிரி பாரேன் ஹீட் ஆகவும் பகல் நேரங்களில் 32 டிகிரி பாரன்ஹீட் ஆகவும் இருக்கும். இதனால் இன்சயிட் லேண்டர் உடன் பொருத்தப்பட்டுள்ள கேபிள்களில் சுருக்கங்களும் விரிப்புகளும் ஏற்படும் இதனால் தரவுகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நாசா கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *