இன்று நாசா படைக்கவிருக்கும் சாதனை!!

இன்று நாசா படைக்கவிருக்கும் சாதனை!!

மனிதகுல வரலாற்றில் முதல் முறையாக வேறொரு கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்கவைக்க இருக்கிறது நாசா. கடந்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பியது. இதில் perseverance என்ற ரோவரும் ingenuity என்ற ஹெலிகாப்டரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 7 மாத பயணத்திற்கு பிறகு ஜனவரி 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தை அடைந்தது.

Ingenuity Gets Ready for Lift-Off with Support from Ames Aeronautics | NASA

செவ்வாய் கிரகத்தை அடைந்த ரோவர் செவ்வாய் கிரகத்தின் அழகிய தோற்றத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியது. மேலும் செவ்வாய் கிரகத்தின் காற்றின் ஒலியையும் பதிவு செய்து அனுப்பியது.ரோவரின் கீழ் பகுதியில் ingenuity என்ற ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ஹெலிகாப்டர் பத்திரமாக செவ்வாய் கிரகத்தின் தரையில் இறங்கி உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இன்று முதன் முறையாக நாசா இந்த ஹெலிகாப்டரை பறக்க வைக்க உள்ளது. 3 அடி உயரத்திற்கு பறக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது நாசா. இது மிகவும் சவாலான வேலை என நாசா தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஈர்ப்பு விசை கிடையாது மேலும் காற்றின் அடர்த்தியும் மிக குறைவு என்பதால் இந்த ஹெலிகாப்டரை பறக்க வைப்பது சவாலானது என்கிறது நாசா.

1 கிலோ எடையில் உருவாகியுள்ள இந்த ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் பறக்கும் போது படம் எடுக்கும், இந்த படங்களை ரோவர் மூலம் பூமிக்கு அனுப்ப உள்ளது. நாசாவின் இந்த புதிய முயற்சியை காண உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *