செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராகும் ஹெலிகாப்டர்..!!எப்போது தெரியுமா?

செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராகும் ஹெலிகாப்டர்..!!எப்போது தெரியுமா?

அமெரிக்காவின் NASA நிறுவனம் கடந்த ஆண்டு கடந்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பியது. இதில் perservance என்ற ரோவரும் Ingenuity என்ற சிறிய ஹெலிகாப்டரும் அனுப்பி வைக்கப்பட்டது. 7 மாத கால பயணத்திற்குப் பிறகு ஜனவரி 18 ஆம் தேதி வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை அடைந்தது.

செவ்வாய் கிரகத்தில் ரோவர்

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியை அழகாக படமெடுத்து பூமிக்கு அனுப்பியது. மேலும் செவ்வாய்கிரத்தின் காற்றின் சத்தத்தை பதிவு செய்து பூமிக்கு அனுப்பியது. நாசாவின் இந்த திட்டத்தில் முதன் முறையாக ஹெலிகாப்டரை செவ்வாய்க்கு அனுப்பியுள்ளது.

பறக்கும் தேதி

ஹெலிகாப்டர் வெற்றிகரமாக பறக்கும் சூழ்நிலையில் வேறொரு கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் என்ற சாதனையை பெரும். இதன் முதல்கட்டமாக ரோவர் ஹெலிகாப்டரை செவ்வாயின் தரைக்கு இறங்கியுள்ளது.

இதன் மூலம் நாசா விஞ்ஞானிகள் இந்த ஹெலிகாப்டரை ஏப்ரல் 8 ஆம் தேதி முதன்முறையாக பறக்க வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் இரவு ஆரபிக்க உள்ளதால் இந்த ஹெலிகாப்டர் மைனஸ் 100 டிகிரி செல்ஸியஸ் குளிரை சமாளிக்க வேண்டியுள்ளது. இந்த ஹெலிகாப்டர் அடுத்த ஒரு மாதத்தில் 5 முறை பறக்க உள்ளது.

ஹெலிகாப்டரின் பாதை

முதல் முறையாக பறப்பதால் சமனான தரைப்பகுதிக்கு மேல் தான் பறக்க உள்ளது. ரோவர் தரை இறக்கிய பகுதிக்கு அருகில் தான் இந்த ஹெலிகாப்டர் பறக்க உள்ளது.இந்த ஹெலிகாப்டரை ரோவர் 60 மீட்டர் தொலைவில் இருந்து கண்காணிக்கும். காற்றின் வேகம் மற்றும் காற்றின் அடர்த்தியை கண்காணித்து ஹெலிகாப்டர் பறப்பதற்கான கட்டளையை அனுப்பும்.

சவால்கள்

இந்த பயணத்தில் ஹெலிகாப்டருக்கு உள்ள சவாலில் ஒன்று செவ்வாயின் குளிரில் எவ்வாறு சமாளிக்கும் என்பதே ஆகும். ஹெலிகாப்டரில் ஹெலிகாப்டர் மற்றும் தெர்மோஸ்டர்ட் பொருத்தப்பட்டுள்ளது. அந்த குளிரின் முதல் நாளில் எவ்வாறு சமாளிக்கும் என்பதை பொறுத்தே அடுத்தகட்ட ஹெலிகாப்டரின் அடுத்தகட்ட பயணங்கள் அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *