நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து நடராஜன் விலகல்!

நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து நடராஜன் விலகல்!

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து நடராஜன் விலகியுள்ளார். ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக இருப்பவர் நடராஜன். அவர் கடந்த 2 போட்டிகளாக ஹைத்ராபாத் அணிக்காக விளையாடவில்லை, முதல் போட்டியின் போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடமுடியவில்லை.

காயத்தின் தன்மை அதிகமாக உள்ளதால் இனிவரும் போட்டிகளில் விளையாட முடியாத நிலை உள்ளது. இதனால் நடப்பு சீசனில் இருந்து நடராஜன் விலகி உள்ளதாக ஹைத்ராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது ஹைத்ராபாத் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.யாக்கர் பந்து வீசுவதில் அசத்தி வந்தவர் நடராஜன், கடந்த சீசனில் ஹைத்ராபாத் அணிக்கு மிக முக்கிய வீரராக இருந்து இந்திய அணியிலும் அறிமுகமாகி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *