உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது நியூஸிலாந்து அணி!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது நியூஸிலாந்து அணி!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடத்தப்பட்ட சாம்பியன்ஷிப் போட்டியை வென்று சாதனை படைத்துள்ளது நியூஸிலாந்து அணி. இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள southamption மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச தீர்மானித்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, இரண்டாவது இன்னிங்ஸில் 5 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 64 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்திருந்தது. கடைசி நாளில் இந்திய அணியின் கேப்டன் விராட் க்ஹோலி 13 ரன்களுக்கு அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து புஜாரா 15 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.

இந்திய அணி வெற்றி பெறுவது கடினம் என தெரிந்தபிறகும் ட்ரா செய்ய முயற்சி செய்யாமல் தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி. 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நியூஸிலாந்து தொடக்க வீரர்கள் லதம் 9 ரன்களுக்கும், கன்வே 19 ரன்களுக்கு அவுட் ஆகினர், 2 விக்கெட்களை எடுத்து அஸ்வின் நம்பிக்கை அளித்தாலும் நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மற்றும் டெய்லர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்துவீசிய kyle jamieson ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *