மெலிந்து போன வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்!!

மெலிந்து போன வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்!!

உலகின் தனித்துவமான நாடக விளங்கும் வடகொரியாவில் கொரோனா காரணமாக சீனாவின் எல்லைகளை அந்நாட்டு அரசு மூடியுள்ளது இதனால் வடகொரியாவுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் அந்நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 1 மாதமாக மக்கள் முன் தோன்றாமல் இருந்த அந்நாட்டு அதிபர், மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அதில் கிங் ஜாங் உன் முன் இல்லத்தைப்போல கணிசமான அளவு உடல் மெலிந்த தோற்றத்தில் இருந்ததாகவும் இதை பார்த்த அந்நாட்டு மக்கள் தங்களை அறியாமலேயே கண்ணீர் விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பலமுறை கிம் ஜாங் உன் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகின ஆனால் சில நாட்களில் மக்கள் முன் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார். இதய கோளாறால் கிம் பாதிக்கப்பட்டுள்ளதாக தென் கொரியா செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்திருந்தது. ஏற்கனவே உணவு பற்றாக்குறை இருந்து வரும் சூழ்நிலையில் அதிபரின் மெலிந்த உடல் தோற்றம் அந்நாட்டு மக்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. Follow us on @Google News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *