எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை, எங்களுக்கு எதுக்கு கொரோனா தடுப்பூசி? சீனா கொடுத்த 30 லட்சம் தடுப்பூசிகளை திருப்பியனுப்பிய வடகொரியா!

எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை, எங்களுக்கு எதுக்கு கொரோனா தடுப்பூசி? சீனா கொடுத்த 30 லட்சம் தடுப்பூசிகளை திருப்பியனுப்பிய வடகொரியா!

கொரோனா உலக நாடுகளை நிலைகுலைய வைத்துள்ள நிலையில் உலகின் எந்த நாடுடனும் தொடர்பில் இல்லாத வடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா வரவில்லை என்கிறது அந்நாடு. வர்த்தக ரீதியாக சீனாவுடன் நட்புறவில் உள்ளது வடகொரியா. சீனாவில் கொரோனா வேகமாக பரவி வந்த நிலையில் அதன் எல்லை பகுதிகளை முழுவதுமாக மூடியுள்ளது வடகொரியா.

இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் சீனா 30 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வடகொரியாவுக்கு கொடுக்க முன்வந்துள்ளது. ஆனால் வடகொரியா அதை நிராகரித்துள்ளது, எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை இந்த தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு கொடுத்து உதவுங்கள் என்று திருப்பி அனுப்பிவிட்டது.

வடகொரியா அந்நாட்டில் கொரோனா இல்லை என பொய் கூறுவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க கொரோனா பாதித்த நபர்களை கொன்று விடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது தென்கொரியா. மேலும் செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் ட்விட்டரில்

எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை, எங்களுக்கு எதுக்கு கொரோனா தடுப்பூசி? சீனா கொடுத்த 30 லட்சம் தடுப்பூசிகளை திருப்பியனுப்பிய வடகொரியா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *