இந்தியாவில் விற்பனைக்கு வந்தது OnePlus 9 Pro! விலை மற்றும் அதன் அம்சங்கள்!

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது OnePlus 9 Pro! விலை மற்றும் அதன் அம்சங்கள்!

OnePlus 9 Pro ,OnePlus 9R, மற்றும் OnePlus Watch கடந்த வாரம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. OnePlus 9 Pro 8ஜிபி RAM மற்றும் 12 ஜிபி RAM என இரண்டு மற்றும் விதமாக கிடைக்கிறது. இது மூன்று விதமான கலரில் கிடைக்கிறது.

8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி மெம்மரி கொண்ட போனின் விலை 64999 ஆகவும், 12 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி மெம்மரி கொண்ட போனின் விலை 69999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. SBI வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணம் செலுத்தினால் 4000 ரூபாய் டிஸ்கவுண்டும், நேரடியாக இணையதளம் மூலம் American Express Card பயன்படுத்தி ஆர்டர் செய்தால் 10 சதவீத டிஸ்கவுண்டும் உண்டு.

இதன் குறிப்பிடப்படும் வகையிலான அம்ஸங்களாக 2 சிம் கார்ட்கள் போடக்கூடியவைகளாகவும், android 11 OS மற்றும் OxygenOS 11 மூலம் இயங்குவதாகவும் உள்ளது. 6.7 இன்ச் QHD டிஸ்பிலே பயன்படுத்தப்பட்டுள்ளது. 5G பயன்படுத்தும் வசதியும் இதில் உள்ளது. இதன் பேட்டரியின் அளவு 4500mAh ஆக உள்ளது. இந்த போன்களை Amazon மூலமாகவும் நேரடியாக oneplus ஷோரூமிலும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *