நான் நேசிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று..மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வாங்குங்கள் 35 லட்சம் கொடுத்த பேட் கம்மின்ஸ்!!

நான் நேசிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று..மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வாங்குங்கள் 35 லட்சம் கொடுத்த பேட் கம்மின்ஸ்!!

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது, இந்த சூழ்நிலையில் ஐபிஎல் போட்டிகள் அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் இருந்து சில வீரர்கள் விலகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்திய மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வாங்க 50000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளார் பேட் கம்மின்ஸ்.

Image

இது குறித்து அவர் கூறியதாவது, நான் மிகவும் நேசிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று தற்போது உள்ள சூழலில் ஐபிஎல் போட்டிகள் அவசியமா என்ற கேள்வி உள்ளதை அறிவேன். ஊரடங்கில் உள்ள மக்களை மகிழ்விக்க சிறிது நேரம் ஐபிஎல் போட்டிகள் உதவுகிறது.

நாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருந்தாலும் பலர் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பிரதமர் நிவாரண நிதிக்காக 50000 அமெரிக்க டாலர்களை அளிக்கிறேன். எனக்கு தெரியும் இது மிகவும் குறைவான தொகை தான், இருப்பினும் ஒரு சிலருக்காவது இது உதவும் என்று நம்புகிறேன்.

மற்ற வீரர்களையும் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். பலரும் பேட் கம்மின்ஸ்ன் உதவியை பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *