சர்ச்சையை கிளப்பும் pegasus spyware பற்றிய தகவல்கள்!

சர்ச்சையை கிளப்பும் pegasus spyware பற்றிய தகவல்கள்!

தற்போது இந்தியாவில் வெடித்திருக்கும் முக்கியமான பிரச்சனை pegasus spyware எனப்படும் உளவு செயலி மீதான குற்றச்சாட்டு. கடந்த இரு நாட்களுக்கு முன்பு The Wire எனப்படும் செய்தி இணையதளம் ஒன்று pegasus spyware மூலம் உளவு பார்க்கப்பட இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் முக்கிய தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என 300 க்கும் அதிகமான இந்தியர்களின் பெயர் இடம் பெற்றிருந்தது.

ராகுல் காந்தி, பிரஷாந்த கிஷோர் மற்றும் 2 மத்திய அமைச்சர்களின் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது. THe Hindu, Indian Express, Hindustan Times போன்ற முக்கிய செய்தி ஊடங்களின் பத்திரிகையாளர்களின் செல்போன் எண்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளது.

pegasus spyware என்றால் என்ன? pegasus எனப்படுவது இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒரு உளவு பார்க்கும் செயலி இந்த செயலி NSO குரூப்க்கு சொந்தமானது. ஆண்ட்ராய்டு ,IOS மற்றும் Laptop என அணைத்து தளங்களிலும் இந்த செயலி செயல்படும். இந்த செயலி உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் தீவிரவாதிகளின் கைபேசியை உளவு பார்த்து அரசாங்கத்திடம் தெரிவிப்பது.

இந்த செயலி முதன் முதலாக ஐக்கிய அரேபிய அமீரகத்தை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஒருவரின் மொபைல்போனுக்கு அனுப்பப்பட்டது. அதில் ஐக்கிய அமீரகத்தில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக குறுந்செய்தியுடன் ஒரு இணையதள லிங்கும் அனுப்பப்பட்டது. அந்த லிங்கை கிளிக் செய்த உடனே அவரின் மொபைலில் pegasus spyware install செய்யப்பட்டு அவரின் call, chat என அனைத்தும் உளவுபார்க்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தின் மீது பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டு வந்தது, ஆனால் இந்த நிறுவனம் இதை மறுத்து வருகிறது. ராகுல் காந்திக்கும் whatsapp-ல் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதால் இரண்டு முறை செல்போனை மாற்றியுள்ளார். அதே போல பிரசாந்த் கிஷோர் 5 முறை மொபைல் போனை மாற்றிய பிறகும் ஹேக்கிங் தொடர்வதாக புகார் அளித்துள்ளார்.

எப்படி போனில் இன்ஸ்டால் செய்யப்படுகிறது? உளவு பார்க்கவிருக்கும் நபருக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படும் அதில் உள்ள லிங்கை கிளிக் செய்த உடனே இந்த உளவு செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டு வேலையை தொடங்குகிறது. சில சமயங்களில் missed call மூலமாகவும் கூட இன்ஸ்டால் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த உளவு செயலி இன்ஸ்டால் செய்தவுடன் masage, whatsapp, phonecalls என அணைத்தையும் ஹேக் செய்கிறது, அவ்வளவு ஏன் மொபைல் கேமராவை கூட control செய்கிறது இந்த உளவு செயலி . இந்த செயலியை அணைவருக்கும் உளவு பார்க்க வைக்க முடியாது ஏனெனலில் ஒரு நபரை உளவு பார்க்க வைப்பதற்கான செலவு மிக அதிகம் என்பதால் அரசாங்கம் மட்டுமே யாரை உளவு பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து இன்ஸ்டால் செய்கிறது.

இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனை என்னவென்றால் அப்படி உளவு பார்க்கும் பட்டியலில் 300 இந்தியர்களின் பெயர் இருப்பது தான். குறிப்பாக பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளின் பெயர் இருப்பது தான். இதன் மூலம் மத்தியில் உள்ள பாஜக மக்களை உளவு பார்பதாகவும், இந்த செயலுக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *