PhonePe செயலியில் ரீச்சார்ஜ் செய்ய இனி சேவைகட்டணம்!

PhonePe செயலியில் ரீச்சார்ஜ் செய்ய இனி சேவைகட்டணம்!

Flipkart க்கு சொந்தமான Phonepe செயலியில் இனி ரீச்சார்ஜ் செய்ய சேவைக்கட்டணம் செலுத்த வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு சேவைகளை கொடுக்க google, paytm போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன.

அந்த வகையில் Flipkart நிறுவனத்திற்கு சொந்தமான Phonepe செயலியை இந்தியாவில் ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் திடீரென அந்நிறுவனம் சேவைக்கட்டணத்தை அறிவித்துள்ளது. அதன்படி 50 முதல் 100 ரூபாய்க்குள் ரீச்சார்ஜ் செய்யும் நபர்களுக்கு 1 ரூபாய் சேவைக்கட்டணமும், 100 ரூபாய்க்கு மேல் ரீச்சார்ஜ் செய்யும் நபர்களுக்கு 2 ரூபாய் சேவைக்கட்டணமும் வசூலிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் Phonepe பயனாளர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர். Paytm போன்ற நிறுவனங்கள் இலவசமாக சேவையை வழங்கி வரும் நிலையில் மக்கள் Phonepe வை தொடர்ந்து பயன்படுத்துவார்களா அல்லது மற்ற நிறுவனங்களும் சேவைக்கட்டணத்தை அறிவிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

PhonePe allots stock options worth $200 million to employees - The Economic  Times

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *