வலைப்பயிற்சியில் சிக்ஸர்களை பறக்க விடும் புஜாரா!!

வலைப்பயிற்சியில் சிக்ஸர்களை பறக்க விடும் புஜாரா!!

இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ஆரம்பிக்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் டெல்லி கேபிடல் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக அணிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐபிஎல் ஏலத்தில் புஜாராவை 50 லட்சத்திற்கு எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

2014 ஆம் ஆண்டுக்கு பிறகு புஜாராவிற்கு எந்தவொரு அணியும் வாய்ப்பளிக்கவில்லை, 7 ஆண்டுக்கு பிறகு முதன் முதலாக ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளார் புஜாரா. இதற்காக அவர் மும்பையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

பயிற்சியின் போது புஜாரா சிக்ஸர் அடிக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பொதுவாக புஜாரா நிதானமாக விளையாட கூடியவர். அவர் இந்தியாவிற்காக அதிக அளவில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் புஜாரா.

புஜாரா குறைவான அளவே சிக்ஸர்களை அடிக்கக்கூடியவர். புஜாரா சென்னை அணிக்காக எவ்வாறு விளையாடுவார் என்று சென்னை ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *