தேர்தல் பரப்புரை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி..முக ஸ்டாலினும் ராகுல்காந்தியும் ஒரே மேடையில் பிரட்சாரம்!!

தேர்தல் பரப்புரை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி..முக ஸ்டாலினும் ராகுல்காந்தியும் ஒரே மேடையில் பிரட்சாரம்!!

தமிழக சட்ட சபை தேர்தலுக்கான பிரட்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் கட்சிக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் சென்னை வரும் ராகுல் காந்தி வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். இதையடுத்து சேலம் செல்ல உள்ளார்.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் திமுக தலைவர் ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒரே மேடையில் பிரட்சாரம் செய்ய உள்ளனர். இதற்காக பிரமாண்ட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தியும் முக ஸ்டாலினும் மேற்கொள்ளும் பிரட்சாரம் மிகுந்த கவனம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Rahul Gandhi's three-day visit to Tamil Nadu energised the party in the  state

ராகுல் காந்தி தமிழகத்தில் மேற்கொள்ளும் பிரட்சாரங்கள் பொதுவாக நல்ல வரவேற்பை பெறக்கூடியவை அந்த வகையில் ராகுலின் தமிழக வருகை மிக முக்கியமான திருப்பமாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

FOLLOW US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *