RCB வீரர் படிக்கலுக்கு கொரோனா.! ஐபிஎல்லை விடாமல் துரத்தும் கொரோனா..!

RCB வீரர் படிக்கலுக்கு கொரோனா.! ஐபிஎல்லை விடாமல் துரத்தும் கொரோனா..!

பெங்களூரு அணியின் துவக்க வீரரான தேவ்தத் படிகலுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அந்த அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு நடத்த ஐபிஎல் போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கிய படிக்கல் சிறப்பாக விளையாடினார்.

padikakl

நேற்று தான் டெல்லி வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று படிக்கலுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை போலவே சென்னை அணியில் உதவியாளர்களுக்கும் கொரோனா இருப்பது தெரிவந்துள்ளது.

ஐபிஎல் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கவலையளிப்பதாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *