டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் தேர்வு!!

டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் தேர்வு!!

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி துவங்க உள்ளது. இதற்காக வீரர்கள் பயிற்சியை தொடங்கி உள்ளனர். புனைவில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 வது ஒருநாள் போட்டியின் போது இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயருக்கு தோல்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இங்கிலாந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

மருத்துவர்கள் பரிசோதனையில் ஷ்ரேயஸ் ஐயரின் தோள்பட்டை விலகி இருப்பதும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதாகவும் , அவருக்கு குறைந்தது 4 மாத கால ஓய்வு தேவைப்படுவதாகவும் அறிவுறுத்தினார். இது டெல்லி அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இறுதி போட்டி வரை கொண்டு சென்றார் ஷ்ரேயஸ் ஐயர்.

ஷ்ரேயஸ் ஐயருக்கு பதிலாக அந்த அணி யாரை கேப்டனாக நியமிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த அணியில் ரஹானே, ஸ்டீவ் ஸ்மித் , அஸ்வின் போன்ற அனுபவ வீரர்கள் உள்ளனர்.ஆனால் டெல்லி அணி ரிஷப் பந்தை கேப்டனாக நியமித்துள்ளது. 23 வயதாகும் ரிஷப்பந்த் அதிரடியாக விளையாடக்கூடியவர்.

டெல்லி அணி நிர்வாகம் குறிப்பாக இளைஞர்களின் மீது நம்பிக்கை வைத்துள்ளது. ரிஷப்பந்த் எவ்வாறு கேப்டனாக செயல்படுவார் என்பது அனைவருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *