கொரோனாவால் பாதிக்கப்பட்ட சச்சின் மருத்துவமனையில் அனுமதி!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சச்சின் மருத்துவமனையில் அனுமதி!

கடந்த மார்ச் 27 ஆம் தேதி தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் தனிமைப்படுத்தி கொண்டதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருந்தார். சாலை பாதுகாப்பு தொடரில் பங்கேற்ற பின் தான் சச்சினுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சச்சினை தொடர்ந்து யூசுப் பதான் மற்றும் அவருடைய தம்பி இர்பான் புதனுக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.

இதையடுத்து இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், உங்களுடைய பிராத்தனைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா பாதிப்பை தொடர்ந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இன்னும் சிறிது நாட்களில் வீடு திரும்புவேன் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *