தனது ஸ்டைலான நடிப்பால் மக்களை கவர்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த்!! தாதா சாகேப் விருது வாங்கிய ரஜினிக்கு நடிகர் சத்யராஜ் பாராட்டு!

தனது ஸ்டைலான நடிப்பால் மக்களை கவர்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த்!! தாதா சாகேப் விருது வாங்கிய ரஜினிக்கு  நடிகர் சத்யராஜ் பாராட்டு!

இந்திய சினிமாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்திய திரைத்துறைக்கு நடிகர் ரஜினிகாந்த் அளித்த பணியை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறித்தது.

Don't cast me if you fear backlash: Sathyaraj hits back - DTNext.in

நடிகர் ரஜினிகாந்துக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர், எதிக்கட்சி தலைவர், நண்பர் கமல் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாக ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.

ரஜினியின் இந்த விருதை பாராட்டி நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ரஜினி தன்னுடைய ஸ்டைலான நடிப்பால் மக்கள் மனதை கவர்ந்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட இந்த விருது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *