பாஜக மட்டுமல்ல சீமானிடமும் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், கே.டி ராகவனை ஆதரிக்கும் சீமானின் செயல் வெட்கக்கேடானது- ஜோதிமணி எம்.பி

பாஜக மட்டுமல்ல சீமானிடமும் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், கே.டி ராகவனை ஆதரிக்கும் சீமானின் செயல் வெட்கக்கேடானது- ஜோதிமணி எம்.பி

பாஜகவை சேர்ந்த கே.டி ராகவனின் ஆபாச வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இந்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது அதற்க்கு அவர் இது ஒரு சமூக குப்பை ராகவனின் அனுமதி இல்லாமல் அவரின் தனிப்பட்ட இடத்தில் கேமரா வைத்து வீடியோ எடுப்பது தான் சமூக அவலம் இந்த வீடியோ வெளியிட்டவரை தான் கைது செய்திருக்க வேண்டும் . உலகத்தில் யாருமே செய்யாததையா ராகவன் செய்துவிட்டார் என்று தெரிவித்தார்.

இதற்க்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சீமான் மீது கடந்த காலங்களில் பாலியல் புகார் எழுந்திருக்கிறது. அதை மறைக்கவே சீமான் ராகவனை ஆதரிக்கிறார். சீமான் ஒரு கட்சியின் தலைவர் அவர் இவ்வாறு பேசுவது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாம் தமிழர் கட்சியில் இருக்கும் இளைஞர்களின் மனதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சரியென்ற மனநிலையை சீமான் உருவாக்குகிறார்.பாஜகவிடம் மட்டுமில்ல இதுபோன்ற அருவருக்கத்தக்க செயல்களை ஆதரிக்கும் சீமான் போன்றவர்களிடம் இருந்தும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

சீமானின் இந்த செயல் வெட்கக்கேடானது. சீமான், கே.டி ராகவன் போன்றவர்களின் வளர்ச்சி தமிழ்நாட்டில் பெண்களுக்கு பேராபத்தை விளைவிக்கும். சீமானின் உண்மையான முகத்தை புரிந்துகொண்டு சீமானை புறக்கணிக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *