மின் வெட்டு ஏற்பட அணில்கள் தான் காரணம்,விவாதமான அமைச்சரின் பதிலுக்கு அவர் அளித்துள்ள விளக்கம்!

மின் வெட்டு ஏற்பட அணில்கள் தான் காரணம்,விவாதமான அமைச்சரின் பதிலுக்கு அவர் அளித்துள்ள விளக்கம்!

கொரோனா ஊரடங்கு முடியும் வரை பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை ஏற்படுத்தப்படாது என தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல இடங்களில் மின் தடை இருத்துவருவதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின் தடை ஏற்படுவதற்கான காரணங்களை எடுத்து கூறினார். அதில் அமைச்சர் கூறிய ஒரு பதில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சில இடங்களில் செடிகள் 20 அடி உயரத்திற்கு வளர்கிறது, இதனால் அணில்கள் அந்த செடிகளின் மீது ஏறி மின் கம்பிகளின் மீது ஏறுவதால் மின் தடை ஏற்படுகிறது என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த கருது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக உள்ளது. சிலர் செந்தில் பாலாஜியை அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் தொடர்புபடுத்தி மீம்ஸ்களை பதிவிட்டது வந்தனர். ஒரு சில பேர் இதற்க்கு ஆதரவாகவும் அணில்களால் ஏற்படும் மின் தடை குறித்தும் கட்டுரைகளை பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து அமைச்சர் அளித்துள்ள விளக்கத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை – அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன் என்று பதிலளித்துள்ளார்.

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *