காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகல்…ஐபிஎல் போட்டியிலும் பங்கேற்பதில் சந்தேகமே!!

காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகல்…ஐபிஎல் போட்டியிலும் பங்கேற்பதில் சந்தேகமே!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியின் போது இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது.உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, இதில் அவருக்கு தோள்பட்டையில் உள்ள எலும்பில் அடிபட்டிருப்பது தெரியவந்தது.

Shreyas Iyer to miss IPL 2021, confirms Delhi Capitals Co-owner | Hindustan  Times

இதனால் அவருக்கு அறுவைசிகிச்சை செய்யவேண்டியுள்ளது. அறுவைசிச்சைக்குப் பின் குறைந்தது 4 மாதங்களாவது அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அவர் இங்கிலாந்து தொடரில் இருந்து விலகினார். மேலும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.

அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை என்றால் டெல்லி அணிக்கு யார் கேப்டனாக இருப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார்.

Indian Premier League Final, MI vs DC: Shreyas Iyer Feels Fatigue Crept In  As Delhi Capitals Bowlers "Lost It In Powerplay" | Cricket News

இதனால் அவரின் இழப்பு டெல்லி அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.அந்த அணியில் ரஹானே, அஸ்வின்,ஸ்மித் போன்ற அனுபவ வீரர்கள் உள்ளனர். மேலும் ரிஷபந்த், தவான் போன்ற வீரக்ளும் உள்ளனர். ஏற்கனவே ரஹானே,அஸ்வின்,ஸ்மித் போன்ற வீரர்கள் கேப்டன்சியில் அனுபவம் வாய்ந்தவர்களாக உள்ள நிலையில் அந்த அணி நிர்வாகம் யாரை கேப்டனாக நியமிக்கும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *