இரண்டாவது ஒரு நாள் போட்டி போராடி தோற்றது பாகிஸ்தான், சர்ச்சையில் சிக்கிய பாகார் ஜமான் ரன் அவுட்!

இரண்டாவது ஒரு நாள் போட்டி போராடி தோற்றது பாகிஸ்தான், சர்ச்சையில் சிக்கிய பாகார் ஜமான் ரன் அவுட்!

முதல் இன்னிங்ஸ்

தென்னாபிரிக்கா மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது.முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்கள் எடுத்து. அந்த அணியின் கேப்டன் பாவுமா 92 ரன்களையும் டீகாக் 80 ரன்களையும் வான் டெர் டுசென் 60ரன்களையும் டேவிட் மில்லர் 50 ரன்களையும் எடுத்தனர்.

Pak Vs SA: Proteas Set 342-Run Target For Green Shirts In 2nd ODI

பக்கீர் இன்னிங்ஸ்

342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தானின் முன்னனி ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். துவக்க வீரராக களமிறங்கிய பாக்கீர் ஜமான் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். ஒரு கட்டத்தில் மிகவும் மோசமான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து எடுத்து சென்றார்.

ஆனால் அவருடன் விளையாடிய மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர், இதனால் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்ற சூழ்நிலை இருந்தது. இருப்பினும் பாக்கீர் 200 ரன்கள் அடிப்பதற்கு நல்ல வாய்ப்பு இருந்தது.

ரன் அவுட் சர்ச்சை

கடைசி ஓவரை வீசிய லுங்குடி முதல்பந்தை ஆப் சைடு திசையில் அடித்து இரண்டு ரன்களுக்கு ஓடினார். பீல்டர் பந்தை பௌலர் எண்டில் வீசுவது போல சைகை செய்தார் டீகாக் ஆனால் பந்து விக்கெட் கீப்பர் எண்டில் வந்தது இதை சுதாரிப்பதற்குள் ரன் அவுட் ஆனார் பாக்கிர்.

தென்னாபிரிக்கா வெற்றி

இருப்பினும் அவர் அடித்த 193 ரன்களே இரண்டாவது இன்னிங்சில் எடுத்த அதிகபட்ச ரன்களாகும், மேலும் தென் அப்பிரிக்காவுடன் தனிநபர் எடுத்த அதிகபட்ச ரன்களும் இதுவே என்ற சாதனையை படைத்தார். இறுதியில் தென்னாபிரிக்கா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *