கார்த்தி, ராஷ்மிகா நடித்த சுல்தான் படம் ரிலீஸ், முதல் நாள் நல்ல வரவேற்பு படத்தின் கதை என்ன?

கார்த்தி, ராஷ்மிகா நடித்த சுல்தான் படம் ரிலீஸ், முதல் நாள் நல்ல வரவேற்பு படத்தின் கதை என்ன?

நடிகர் கார்த்தி, மற்றும் ராஷ்மிகா தமிழில் அறிமுகமாகி நடித்துள்ள படம் சுல்தான். இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் எழுதி இயக்கியுள்ளார், மேலும் இந்த படத்தில் யோகி பாபு,லால், நெப்போலியன்,ஹரிஷ் பேரிடி என பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Sulthan Movie Review: Check Karthi's Sultan Rating, Audience Response, Hit  or Flop

கிராமத்து நாயகியாக நடித்துள்ள ராஷ்மிக்காவிற்கு இது முதல் தமிழ்ப்படம் , கிராமத்து நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகியுள்ளது காலை முதலே இந்தபடத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

விவசாயம் , ரவுடீசம் என முழுக்க முழுக்க இதை பற்றி தான் பேசுகிறது இந்த படம் . ரவுடிகளை வைத்து கொண்டு விவசாயத்தை நாசம் செய்யும் கார்பரேட்களை எப்படி ரவுடிகை வைத்தே பந்தாடுகிறார் என்பதே இந்த படத்தின் கதை. கார்த்தியின் தந்தையாகவும் பெரிய ரவுடி கூட்டத்தின் தலைவரவும் உள்ளார் நெப்போலியன்.

சிறு வயதில் தாயை இழந்து வளர்ந்த கார்த்தி , அவரின் தந்தைக்கு பிறகு தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வரும் ரவுடிகளை வைத்து தங்களின் ஊரில் உள்ள விவசாய பிரச்சனைகளை எப்படி சமாளித்தார் என்பதே கதை. ரெமோ படத்தை இயக்கிய பிறகு 5 வருடங்கள் கழித்து வெளிவந்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *