யார் இந்த தாலிபான்கள்?ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது?

யார் இந்த தாலிபான்கள்?ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது?

தாலிபான்கள் என்றால் மாணவர்கள் என்று அர்த்தம், தாலிபான்களை தோற்றுவித்தவர் முல்லா முகமத் உமர் ஆரம்பகாலத்தில் ஏராளமானவர்கள் தாலிபான்களை பின்தொடர்ந்தனர் அதற்கான காரணம் அவர்க்ளின் வாக்குறுதிகள் அணைவருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் உண்மையான முஸ்லீம் ஆட்சி மீட்டெடுக்கப்படும் என்று அறிவித்தனர். இதனால் சுமார் 75000 பேர் இந்த அமைப்பில் இணைந்து அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

தாலிபான்கள் பெண்களுக்கு எதிராக அதிக அநீதிகளை விதிக்கின்றனர். பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, வீட்டைவிட்டு தனியாக வெளியே வரக்கூடாது, பெண்கள் கல்வி கற்கக்கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு கல்லடி,சவுக்கடி போன்ற கொடூரமான தண்டனைகள் வழங்கப்படும்.

தாலிபான்கள் தற்போது எப்படி ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளது என்றால், அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சி அமைந்த பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை விலக்கி கொள்வதாக அறிவித்தார், இதனால் தாலிபான்களுக்கு சாதகமான நிலை நிலவியது.

இதையடுத்து தாலிபான்கள் இரண்டு பெரிய நகரங்களை கைப்பற்றியது. இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் தலைநகரான kabul-ல் தாலிபான்கள் நுழைந்தனர். அமெரிக்க தூதரகத்தில் இருந்து பணியாளர்களை வெளியேற்றினர் , இதனால் ஆப்கானிஸ்தான் அதிபர் Ashraf Ghani பதவியில் இருந்து விலகினார்.

தாலிபான் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில் வெளிநாட்டவர்கள் இங்கிருந்து வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் வேலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் ஆனால் பெண்கள் கண்டிப்பாக பர்தா அணிய வேண்டும் மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளும் நீதிமன்றத்தின் படி மாற்றி அமைக்கப்படும் என்று தெறிவித்துளார்.

மேலும் பத்திரிக்கை சுதந்திரம் பாதிக்காது, எங்களை விமர்சிக்க முழு சுதந்திரம் உண்டு ஆனால் அதில் நேர்மை இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அமைதியான முறையில் அதிகாரம் எங்களின் கைகளுக்கு வரவேண்டும் என தலிபான்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் நாடுகளை விட்டு வெளியேறிவருகின்றனர். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் உலக நாடுகள் எங்களை அமைதியாக வாழ விடுங்கள் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *