தமிழக ஆளுனருடன் தமிழிசை சௌந்தர்ராஜன் சந்திப்பு! கதர் வேஷ்டி சட்டையை பரிசளித்தார்!

தமிழக ஆளுனருடன் தமிழிசை சௌந்தர்ராஜன் சந்திப்பு! கதர் வேஷ்டி சட்டையை பரிசளித்தார்!

தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டுள்ளார் ஆளுநரின் நியமனத்தில் உள்நோக்கம் இருப்பதாக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன, பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே தமிழக ஆளுநராக பதவியேற்றார். இந்நிலையில் நேற்று சென்னையில் தமிழக ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

https://rzp.io/l/1tfxzKS

ஆர்.என் ரவியை நேரில் சந்தித்த போது தமிழ் பாரம்பரிய உடையான கதர் வேஷ்டி சட்டையை பரிசாக வழங்கியுள்ளார். நேற்று காந்தி வேறு ஆடைகள் அணிவதை துறந்து கதர் ஆடையை மதுரையில் அணிய தொடங்கிய தினம் என்பதால் அவருக்கு கதர் வேஷ்டி சட்டையை பரிசளிப்பதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *