தமிழகத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு!

தமிழகத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு!

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. மளிகை கடைகள்,இறைச்சி கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் ஊரடங்கின் போது திறக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது . அத்தியாவசிய அரசு துறை அலுவலகங்கள் மட்டும் இயங்கும் என்றும், அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு பூங்காங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி இல்லை. திருமண விழாக்களில் 50 நபர்களும் இறப்பு நிகழ்வுகளில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி. ஊரடங்கு காலத்திலும் அம்மா உணவகங்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி,நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *