தமிழகத்தில் 8 ஆயிரத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் 8 ஆயிரத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்ற ஆண்டை விட மிக வேகமாகா பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு பின் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Latest News LIVE Updates: India Reports 68,020 New COVID-19 Cases, 291  Deaths In Last 24 Hours

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 954948 ஆக உள்ளது. இன்று 25 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர், கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12970 ஆக உள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இருப்பினும் இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 45 வயதிற்கு அதிகமானவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது இதனால் கொரோனா இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *