தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு..! எவை எல்லாம் இயங்கும்?

தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு..! எவை எல்லாம் இயங்கும்?

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு நாளை முடிவடைய உள்ள நிலையில், வரும் திங்கள்கிழமை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காய்கறிகள் மற்றும் பழங்கள் வாகனங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும் தலைமைச் செயலகத்திலும் மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும். தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் இன்றும், நாளையும் மட்டும் தனியார், அரசுப் பேருந்துகள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்படும்.

அனைத்து கடைகளும் இன்று இரவு ஒன்பது மணி வரை செயல்பட அனுமதி அனைத்து கடைகளும் நாளை காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.

உணவகங்கள் காலை 6-10, மதியம் 12-3, மாலை 6-9 மணி வரை பார்சலுக்கு மட்டுமே அனுமதி, ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *