தமிழகத்தில் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு!!

தமிழகத்தில் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு!!

தமிழகத்தில் இன்று முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.அனைத்து மளிகை கடைகளும் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்ச்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி இல்லை. பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி இல்லை.

இறைச்சி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.கொரோனாவை கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *