தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி – அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படடுத்தப்பட்டுள்ளது.இந்த நேரத்தில் தனியார் வாகனங்கள், அரசு வாகனங்கள் இயங்க அனுமதி கிடையாது.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு பால் விநியோகம், மருந்தகம் உள்ளிட்ட அத்திவாசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி ரத்து பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.

Tamil Nadu reports 7,987 Covid cases in 24 hrs, total death tally reaches  12,999

தங்கும் விடுதிகள் கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து இரவிலும் செயல்பட அனுமதி அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல அனைத்து நாட்களிலும் தடை. திருமண விழாக்களில் 100 பேருக்கும் இறுதிச்சடங்கில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி.

தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய ஊக்குவிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 10,723 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,91,451 ஆக உயர்வு தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *