நாட்டுப்புற கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணம் அறிவிப்பு!

நாட்டுப்புற கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணம் அறிவிப்பு!

தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு மேலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளது. திருவிழா காலங்களில் மட்டுமே வருமானம் ஈட்டக்கூடியவர்கள் நாட்டுப்புறக் கலைஞர்கள். கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டுப்புற கலைஞர்கள் மிகுந்த வேதனையில் இருந்தனர்.

பசுமைப் பக்கங்கள்...: தெருக்கூத்து எங்களின் உடல் அல்ல; உதிரம்

சென்ற ஆண்டும் திருவிழா நடைபெறாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில் கொரோனா நிவாரணமாக 2000 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

இதன் மூலம் தவில், நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட கலைஞர்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 6810 கலைஞர்கள் பயன் பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *