தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு! 11 மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடு!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு! 11 மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடு!

தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கு வரும் 7 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்துள்ளது தமிழக அரசு. கோவை திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறையாததால் 11 மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.

தனியாக செயல்படுகின்ற காய்கறி கடைகள், இறைச்சி கடைகள்,மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tamil Nadu to impose lockdown-like restrictions from April 10 - Here's  what's allowed, what's not

அணைத்து அரசு அலுவலங்களிலும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. சார் பதிவாளர் அலுவலகங்கள் 50 சதவீத டோக்கன்கள் மட்டும் விநியோகிக்க அனுமதி, தீப்பெட்டி தொழிற்ச்சாலைகளில் 50 சதவீத பணியாளர்கள் பணியாற்ற அனுமதி.

மின் பணியாளர் (Electricians) பிளம்பர்கள் (Plumbers) கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

வாடகை கார்களில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி. ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மற்றும் தேநீர் கடைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[location-weather id=”815″]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *