தமிழகத்தில் மீண்டும் பல புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு..!

தமிழகத்தில் மீண்டும் பல புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு..!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாளை மறுநாள் முதல் மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. இந்த கட்டுப்பாடுகள் வரும் 20 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் என அனைத்திலும் 50 சதவீத பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி, மெட்ரோ ரயில்கள், பொதுப்போக்குவரத்துகளில் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதி.தேநீர் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி.

மளிகைக்கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி, 3000 சதுரஅடிக்கு அதிகமுள்ள கடைகள் திறக்க அனுமதி இல்லை.கல்வி, கலாச்சாரம் போன்ற அணைத்து விதமான விழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி.

இறைச்சி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்கும் என்றும், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்படாது என்றும் ஏற்கனவே அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக பகுதிகளில் உள்ள அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை. அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்ச்சாலைகள் இயங்க அனுமதி. இரவு நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள் நிறுவனங்களில் இருந்து அனுமதி கடிதம் வாங்கி வர வேண்டும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *