கொரோனா பரவல் காரணமாக மதுக்கடைகளை மூடக்கோரி வழக்கு !

கொரோனா பரவல் காரணமாக மதுக்கடைகளை மூடக்கோரி வழக்கு !

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மதுக்கடைகளை மூடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.அதில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பல்வேறு செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் பாதிக்க முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி, இந்த நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க கூடிய மதுக்கடைகளை மூடாமல் இருப்பது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து மாநில அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தற்போது மதுக்கடைகளின் நேரத்தை குறைத்துள்ளது தமிழக அரசு இருப்பினும் இந்த சூழலில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *