Thalapathy 65 படத்தில் பிக் பாஸ் கவின்?? நடிகர் விஜய் கலந்து கொண்ட தளபதி 65 பூஜை ஸ்டில்ஸ்!

Thalapathy 65 படத்தில் பிக் பாஸ் கவின்?? நடிகர் விஜய் கலந்து கொண்ட தளபதி 65 பூஜை ஸ்டில்ஸ்!

விஜயின் 65 வது படத்தை கோலமாவு கோகிலா, மற்றும் டாக்டர் போன்ற படங்களை இயக்கியுள்ள இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தளபதி 65 படத்தின் ஒவ்வொரு அப்டேட்களும் விஜய் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. விஜயின் கடைசி படமான மாஸ்டர் படம் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது.

Image

இந்நிலையில் தளபதி 65 படத்தின் நாயகியாக நடிக்க பூஜா ஹெட்ஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. ரசிகர்களின் வரவேற்பை அடுத்து இந்த படத்திற்கான பூஜையை தொடங்கியுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இன்று நடைபெற்ற பூஜையில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அவர் எப்பொழுதும் போல பார்ப்பதற்கு மிக இளமையான தோற்றத்தில் இருந்தார். இதில் இயக்குனர் நெல்சன் தீலிப்குமார், இசைஅமைப்பாளர் அனிருத், நடிகர் விடிவி கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் புகைப்படங்களை வெளியிட அது விஜய் ரசிகர்களால் கொண்டாப்பட்டு வருகிறது.

Image

அந்த போட்டோக்களில் கடைசி வரிசையில் பிக் பாஸ் கவினும் உள்ளார். இதனால் தளபதி 65 படத்தில் அவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் கவினும் இந்த போட்டோக்களை பகிர்ந்துள்ளதால் கவின் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *